மின்வாரிய தொழிலாளர் சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம்


மின்வாரிய தொழிலாளர் சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 April 2022 11:04 PM IST (Updated: 7 April 2022 11:04 PM IST)
t-max-icont-min-icon

மின்வாரிய தொழிலாளர் சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

மயிலாடுதுறை
மயிலாடுதுறை மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து மின்வாரிய தொழிலாளர் சம்மேளனம் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நாகை மாவட்ட உப தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சாரதி, கோட்ட செயலாளர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நாகை மாவட்ட தலைவர் செல்வராஜ் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தின்போது மின்வாரியத்தில் அதிக நேரம் பணி செய்ய நிர்பந்தித்து தொழிலாளர் விரோத போக்கை கடைபிடிக்கும் அதிகாரிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. மின்வாரியத்தின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு தொழிலாளர்களை நடத்த வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டன. இதில், மின்வாரிய தொழிலாளர் சம்மேளன நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story