போன் உரையாடல் ஒட்டு கேட்பு வழக்கு:- முன்னாள் மந்திரி ஏக்னாத் கட்சே போலீஸ் நிலையத்தில் ஆஜராகி வாக்குமூலம்


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 7 April 2022 11:32 PM IST (Updated: 7 April 2022 11:32 PM IST)
t-max-icont-min-icon

போன் உரையாடல் ஒட்டு கேட்பு வழக்கில் முன்னாள் மந்திரி ஏக்னாத் கட்சே போலீஸ் நிலையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

மும்பை, 
மராட்டிய மாநில உளவுப்பிரிவு தலைவராக இருந்தவர் ஐ.பி.எஸ். அதிகாரி ராஷ்மி சுக்லா. தற்போது இவர் மத்திய அரசு பணியில், ஐதராபாத்தில் சி.ஆர்.பி.எப். கூடுதல் டி.ஜி.யாக உள்ளார். இவர் உளவுப்பிரிவு தலைவராக இருந்த போது, தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் ஏக்னாத் கட்சே, சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்தின் போன் உரையாடல்களை ஒட்டுகேட்டதாக சிறப்பு பிரிவு கூடுதல் கமிஷனர் அளித்த புகாரின் பேரில், ராஷ்மி சுக்லா மீது கடந்த மாதம் கொலபா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
 இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட ஏக்னாத் கட்சே அவரது வாக்குமூலத்தை பதிவு செய்ய போலீசார் அழைத்து இருந்தனர். இதையடுத்து இன்று காலை 11 மணியளவில் கொலபா போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அவர் இன்ஸ்பெக்டர் அந்தஸ்து அதிகாரியிடம் வழக்கு தொடர்பான தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார். பின்னர் அவர் அங்கு இருந்து புறப்பட்டு சென்றார்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "போன் ஒட்டு கேட்பு வழக்கு தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஏக்னாத் கட்சே சாட்சி என்பதால் அவரை வாக்குமூலம் அளிக்க அழைத்து இருந்தோம். எனவே அவர் போலீஸ் நிலையம் வந்து வாக்குமூலத்தை பதிவு செய்தார் " என்றார்.

Next Story