ஆர்.டி.ஓ.அலுவலகம் முன் பொதுமக்கள் தர்ணா


ஆர்.டி.ஓ.அலுவலகம் முன் பொதுமக்கள் தர்ணா
x
தினத்தந்தி 8 April 2022 12:00 AM IST (Updated: 8 April 2022 12:00 AM IST)
t-max-icont-min-icon

வாய்க்கால் கரையோர வீடுகளை அகற்ற உத்தரவிட்டதால் ஆர்.டி.ஓ.அலுவலகம் முன் பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

திருப்பூர், ஏப்.8-
வாய்க்கால் கரையோர வீடுகளை அகற்ற உத்தரவிட்டதால் ஆர்.டி.ஓ.அலுவலகம் முன் பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
 பொதுமக்கள் தர்ணா
திருப்பூர் மாநகராட்சி 34-வது வார்டு பாளையக்காடு சேர்மன் கந்தசாமி நகர் பகுதியை சேர்ந்தவர்கள், ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை நிறுவன தலைவர் பவுத்தன் தலைமையில் திருப்பூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு நேற்று காலை வந்தனர். பின்னர் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அதன்பிறகு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-நாங்கள் கடந்த 40 ஆண்டுகளாக எங்கள் பகுதியில் குடியிருந்து வருகிறோம். எங்களுக்கு ரேஷன் கார்டு, ஓட்டுனர் உரிமம், ஆதார் கார்டு, மின் இணைப்பு என அனைத்தும் உள்ளன. 80 ஆதிதிராவிடர் குடும்பத்தினர், 40 மற்ற சமூகத்தினர் அங்கு வசிக்கிறார்கள். அனைவரும் கூலித்தொழிலாளர்கள். நீர்வளத்துறைக்கு சொந்தமான மண்ணரை வாய்க்கால் கரையோரம் அனுமதி பெறாமல் வீடு கட்டியுள்ளதாகவும், 21 நாட்களில் வீடுகளை உடனடியாக அகற்றும்படி கடந்த 2-ந் தேதி அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்தனர். 
காலஅவகாசம்
அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்வதாக தெரிவிக்கிறார்கள். எங்களுக்கு மாற்று இடம் வழங்கி அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். அதுபோல் குடியிருப்பை காலி செய்ய காலஅவகாசம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

Next Story