சைக்கிள் திருடிய 2 சிறுவர்கள் கைது

சைக்கிள் திருடிய 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சைக்கிள் திருடிய 2 சிறுவர்கள் கைது
Published on

ஆண்டிமடம்

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள கவரப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சாரங்கபாணி. இவரது மகன் மணிகண்டன்(வயது 17), ஆண்டிமடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும்போது அரசு இலவச சைக்கிள் கொடுத்ததை தனது வீட்டின் முன்பு உள்ள மாமரத்தின் நிழலில் நிறுத்தி வைப்பது வழக்கம். அதேபோல் வீட்டில் முன்புள்ள மாமரத்து நிழலில் நின்றிருந்த சைக்கிள் நேற்று முன்தினம் முதல் காணவில்லை. இதுகுறித்து சாரங்கபாணி ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சைமணி வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், வரதராஜன்பேட்டை அந்தோணியார்புரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனும், தென்னூர் வடக்குத்தெருவை சேர்ந்த 15 வயது சிறுவனும் சேர்ந்து சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com