கரூர் கலெக்டர் அலுவலகத்தில் அ.தி.மு.க.வினர் மனு
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் அ.தி.மு.க.வினர் மனு அளித்தனர்.
கரூர்,
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திருவிகா தலைமையிலான அ.தி.மு.க.வினர் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத்திடம் நேற்று கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- கரூர் நெடுஞ்சாலைதுறையில் சாலை பராமரிப்பு டெண்டர் எடுத்த நிறுவனம் ஒன்று பணியை செய்யாமலேயே செய்ததாக கூறி கரூர் நெடுஞ்சாலை துறை அதிகாரி துணையுடன் அரசு பணத்தை கொள்ளையடித்து விட்டனர். இந்த ஊழல் சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடந்த 5-ந்தேதி விரிவான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தார். இந்தநிலையில் கரூர் நெடுஞ்சாலைதுறை அதிகாரி உதவியோடு அந்த நிறுவனம் சாலை பராமரிப்பு பணிகளை விசாரணையில் உள்ள சம்பந்தப்பட்ட இடங்களில் செய்து வருகின்றனர். புகார் மனு நிலுவையில் உள்ள போது ஊழல் சம்பவம் நடைபெற்ற இடங்களில் உள்ள தடயங்களை அழித்து வருகின்றனர். எனவே தாங்கள் தலையிட்டு மேற்கண்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story