நீலகண்ட பிள்ளையார் கோவில் சித்திரை திருவிழா
பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பேராவூரணி:
பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்துடன் திருவிழா ெதாடக்கம்
தஞ்சை மாவட்டம் பேராவூரணி முடப்புளிக்காடு பகுதியில் ஏந்தல் நீலகண்ட பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அதேபோல இந்த ஆண்டும் நேற்று கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் ேகாவில் நிர்வாக அதிகாரி மற்றும் பரம்பரை அறங்காவலர்கள், முடப்புளிக்காடு கிராமத்தார்கள், சங்கரன் வகையறாக்கள், நகர வர்த்தக கழக உறுப்பினர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்
தொடர்ந்து 12 நாட்கள் மயில் வாகனம், காமதேனு வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், ரிஷப வாகனம் என பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெற உள்ளது.
15-ந் தேதி தேரோட்டம்
திருவிழாவின்முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 15-ந் தேதி(வெள்ளிக்கிழமை) அதிகாலை 4 மணி முதல் பால்காவடி, பன்னீர்காவடி, அக்னி காவடி, தொட்டில் காவடி, பறவை காவடி என பல்வேறு காவடிகளை பக்தர்கள் எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்த உள்ளனர்.
அன்றைய தினம் மாலை 5 மணிக்கு தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தேரோட்டத்தில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி- தெய்வானையுடன் முருகன் தேரில் எழுந்தருள உள்ளார். தேரோட்ட நிகழ்வை காண்பதற்காக பேராவூரணியை சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெப்ப உற்சவம்
தொடர்ந்து பத்தாம் திருவிழாவாக தீர்த்தவாரியும், பதினோராம் திருவிழாவாக திருக்கல்யாணமும் அன்று இரவு தெப்ப உற்சவமும் பனிரெண்டாம் திருவிழாவாக விடையாற்றி உற்சவமும் சிறப்பாக நடைபெற உள்ளது.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாக அதிகாரி சிதம்பரம், பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் முடப்புளிக்காடு கிராமத்தார்கள், ஸ்தானிகர்கள், சங்கரன் வகையறாக்கள் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story