கோடை நெல் சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரம்


கோடை நெல் சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரம்
x
தினத்தந்தி 8 April 2022 12:58 AM IST (Updated: 8 April 2022 12:58 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் பகுதியில் கோடை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கும்பகோணம்:
கும்பகோணம் பகுதியில் கோடை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
மோட்டார் பம்பு வசதி
 
கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் மூன்று போகம் நெல் சாகுபடியில் ஈடுபடுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக இந்த பகுதியில் நெல் சாகுபடிக்கு போதிய அளவு தண்ணீர் கிடைக்காததால் கோடை நெல் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. இந்த நிலையில் தங்களது சாகுபடி நிலங்களில் மோட்டார் பம்பு வசதி கொண்ட ஒரு சில விவசாயிகள் மட்டும் கோடை நெல் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். 
கோடை நெல் சாகுபடி பணி 
தற்போது சம்பா நெல் சாகுபடி அறுவடை முடிந்துள்ள நிலையில் கும்பகோணம் சுற்றுவட்டார பகுதியில் மோட்டார் பம்பு வசதிகொண்ட விவசாயிகள் குறுகிய கால கோடை நெல் சாகுபடி பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக மோட்டார் பம்ப் மூலம் தண்ணீரை இறைத்து தங்களது சாகுபடி வயல்களை கோடை நெல் சாகுபடிக்கு தயார் செய்து விதை தெளிக்கும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். 
தட்டுப்பாடின்றி உரம் 
110 நாட்களுக்குள் அறுவடை செய்யும் வகையில் குறுகிய காலத்தில் உற்பத்தியாகும் நெல் ரகங்களை இந்த  கோடை நெல் சாகுபடிக்கு தேர்வு செய்துள்ள விவசாயிகள் தற்போது நடவு பணிகளை மேற்கொண்டுள்ளனர். 
தற்போது நெல் சாகுபடிக்கு தேவையான டி.ஏ.பி., யூரியா உள்ளிட்ட உரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே சாகுபடிக்கு தேவையான உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story