வீட்டில் பதுக்கிய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


வீட்டில் பதுக்கிய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 8 April 2022 1:39 AM IST (Updated: 8 April 2022 1:39 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் வீட்டில் பதுக்கிய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்:-
சேலத்தில் வீட்டில் பதுக்கிய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரேஷன் அரிசி பதுக்கல்
சேலம் பொன்னம்மாபேட்டை ரெயில்வே லைன் வடக்கு தெருவில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசியை 2 பேர் சரக்கு வேனில் ஏற்றியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் பொன்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் (வயது 33), மணியனூர் காத்தாயம்மாள் நகரை சேர்ந்த சந்தோஷ்குமார் (35) ஆகியோர் என்பது தெரியவந்தது.
2 டன் பறிமுதல்
மேலும் அவர்கள் பொன்னம்மாபேட்டை பகுதிகளில் பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதை மாவாக அரைத்து பின்னர் ஓட்டல்கள், அப்பளம் தயாரிக்கும் நிறுவனத்துக்கு அதிக விலைக்கு விற்றுள்ளனர்.
இதையடுத்து வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 57 மூட்டைகளில் இருந்த 2 டன் ரேஷன் அரிசி மற்றும் சரக்கு வேன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக பிரவீன்குமார், சதோஷ்குமார் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story