இரு தரப்பினர் மோதல் 7 பேர் கைது


இரு தரப்பினர் மோதல் 7 பேர் கைது
x
தினத்தந்தி 8 April 2022 1:39 AM IST (Updated: 8 April 2022 1:39 AM IST)
t-max-icont-min-icon

இரு தரப்பினர் மோதிக்கொண்டதில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

-சேலம்:-
சேலம் அரிசிபாளையத்தை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 23). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பிரிவினருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று மெய்யனூர் பகுதியில் இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். இதில் காயம் அடைந்தவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் 2 தரப்பை சேர்ந்த முருகன் (46), ராஜா (29), குணசேகரன் (23), தங்கராஜ் (46) உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story