26 ஆசிரியர்களுக்கு பணிமாறுதல் உத்தரவு
மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் 26 ஆசிரியர்களுக்கு பணிமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது.
மதுரை,
மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் ஆகியோருக்கு பணியிட மாறுதல் மற்றும் பணி உயர்வுக்கான கவுன்சிலிங் கூட்டம், மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. கமிஷனர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். 91 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் ஒரு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், 5 முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களும், 2 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஒரு உடற்கல்வி இயக்குனர், ஒரு பட்டதாரி ஆசிரியர், ஒரு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், 15 இடைநிலை ஆசிரியர்கள் என மொத்தம் 26 ஆசிரியர்களுக்கு பணிமாறுதல் உத்தரவுகள் வழங்கப்பட்டன. மேலும் 3 மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், 6 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், ஒரு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், 2 உடற்கல்வி இயக்குனர்கள், 3 பட்டதாரி ஆசிரியர்கள், ஒரு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் என மொத்தம் 16 ஆசிரியர்களுக்கு பணி உயர்வு உத்தரவுகள் வழங்கப்பட்டன. இந்த கலந்தாய்வில் துணை கமிஷனர் சங்கீதா, உதவி கமிஷனர் அமிர்தலிங்கம், கல்வி அலுவலர் ஆதிராமசுப்பு, கல்விக்குழு தலைவர் ரவிச்சந்திரன், பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
-------
Related Tags :
Next Story