ஹலால் இறைச்சி சாப்பிட கூடாது என அரசு உத்தரவிடவில்லை - மந்திரி பி.சி.நாகேஸ் பேட்டி
ஹலால் இறைச்சி சாப்பிட கூடாது என அரசு உத்தரவிடவில்லை என்று மந்திரி பி.சி.நாகேஸ் தெரிவித்தார்.
பெங்களூரு:
பெங்களூருவில் பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
ஹலால் இறைச்சியை சாப்பிடக்கூடாது என்று அரசு உத்தரவிடப்பட்டு இருப்பதாக பொய் பிரசாரம் செய்யப்படுகிறது. இதுதொடர்பாக அரசு எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. ஹலால் இறைச்சியை சாப்பிடுவது, வாங்குவது மக்களின் விருப்பம். எந்த பொருளை வாங்கி சாப்பிட வேண்டும் என்ற சுதந்திரம் மக்களுக்கு இருக்கிறது. மக்களின் சுதந்திரத்தில் யாரும் தலையிட முடியாது. சி.டி. ரவி ஹலால் இறைச்சி சாப்பிடக்கூடாது என்று சொல்லி இருப்பதாக கேட்கிறீர்கள். சி.டி.ரவி மந்திரி இல்லை. அவர் ஒரு முன்னாள் மந்திரி ஆவார்.
கர்நாடக மந்திரிகளே, அரசோ ஹலால் இறைச்சி சாப்பிடக்கூடாது என்று ஒரு போதும் கூறவில்லை.இதுபோன்று தேவையில்லாத வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். வியாபாரத்தில் பல தரப்பினர், பல விதமான பொருட்களை விற்பனை செய்கிறாா்கள். எந்த ஒரு பொருளையும் விற்பனை செய்ய கூடாது என்று சொல்ல முடியாது.
இவ்வாறு பி.சி.நாகேஸ் கூறினார்.
Related Tags :
Next Story