பெங்களூருவில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் திருடிய 2 வாலிபர்கள் கைது
பெங்களூருவில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் திருடிய வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.2 ேகாடி மதிப்பிலான பணம், நகை பறிமுதல் செய்யப்பட்டது.
பெங்களூரு:
ரியல் எஸ்டேட் அதிபர்
பெங்களூரு குமாரசாமி லே-அவுட்டில் உள்ள சாகர் ஆஸ்பத்திரி பகுதியில் வசித்து வருபவர் சந்தீப்லால். ரியல் எஸ்டேட் அதிபர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொழில் விஷயமாக சென்னைக்கு சென்று இருந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று சந்தீப் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் 2 மூட்டைகளில் வைக்கப்பட்டு இருந்த பணம், பீரோவில் இருந்த தங்கநகைகளை திருடி சென்று இருந்தனர்.
இதுகுறித்து சந்தீப் அளித்த புகாரின்பேரில் குமாரசாமி லே-அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சந்தீப் வீட்டில் திருடியதாக மண்டியாவை சேர்ந்த சுனில் (வயது 35), ெபங்களூரு மாகடி ேராடு சீகேஹள்ளியில் வசித்து வரும் திலீப் (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின.
வக்கீலுக்கு பணம் கொடுக்க...
அதாவது சுனில் மீது திருட்டு, வழிப்பறி உள்பட 7 வழக்குகள் உள்ளது. இந்த வழக்குகளில் கைதான அவர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். திலீப் கஞ்சா விற்ற வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் சிறைக்குள் வைத்து திலீப்புக்கும், சுனிலுக்கும் பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாக மாறினர்.
பின்னர் சிறையில் இருந்து வெளியே சென்றதும் ஒன்றாக சேர்ந்து திருட 2 பேரும் முடிவு செய்து உள்ளனர். இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு அவர்கள் 2 பேரும் ஜாமீனில் வெளியே வந்து இருந்தனர். சிறையில் இருந்து வெளியே வந்ததும் திலீப் ஆட்டோ ஓட்டி வந்து உள்ளார். அப்போது ஒரு பயணியை அவர் சந்தீப் வீட்டின் அருகே விட்டு உள்ளார்.
அந்த சமயத்தில் சந்தீப்பின் வீட்டை பார்த்ததும் அந்த வீட்டில் புகுந்து நகை, பணத்தை திருட வேண்டும் என்று நினைத்த திலீப் இதுகுறித்து சுனிலிடம் தெரிவித்து இருந்தார். சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே எடுத்த வக்கீலுக்கு 2 பேரும் ரூ.2 லட்சம் வரை கொடுக்க வேண்டி இருந்தது.
ரூ.2 கோடி ரொக்கம், நகை பறிமுதல்
இதனால் சந்தீப் வீட்டிற்குள் புகுந்து திருட 2 பேரும் முடிவு செய்தனர். அதன்படி சந்தீப்பின் வீட்டிற்குள் புகுந்த 2 பேரின் கண்களிலும் 2 மூட்டைகள் தெரிந்து உள்ளது. அந்த மூட்டைகளை பிரித்து பார்த்த போது அதில் கட்டுக்கட்டாக ரூ.500, ரூ.200 நோட்டுகள் என ரூ.1 கோடியே 67 லட்சம் இருந்து உள்ளது.
அந்த பணத்தை எடுத்துக்கொண்ட 2 பேரும் வீட்டின் பீரோவில் இருந்த நகைகளையும் திருடிவிட்டு தப்பி சென்றது அம்பலமானது. இவர்கள் 2 பேரும் கொடுத்த தகவலின்பேரில் ரூ.1.67 கோடி ரொக்கம், ரூ.33 லட்சம் மதிப்பிலான தங்கநகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான 2 பேர் மீதும் குமாரசாமி லே-அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
திருடர்களால் வருமான வரித்துறையிடம் சிக்கிய ரியல் எஸ்டேட் அதிபர்
பெங்களூரு குமாரசாமி லே-அவுட்டில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர் சந்தீப் லால் வீட்டில் திருடியதாக சுனில், திலீப் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.1.67 கோடி பணம், ரூ.33 லட்சம் ஆகியவை பறிமுதல் ெசய்யப்பட்டது. ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் திருடிய வழக்கில் 2 பேர் சிக்கி கொண்டதால், சந்தீப் லாலும் சட்ட சிக்கலில் மாட்டி கொண்டுள்ளார். ஏனெனில், போலீசார் மீட்டுள்ள ரூ.2 கோடி நகை-பணத்துக்கு சந்தீப் லால் முறையாக வருமான வரி கட்டவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் வருமான வரித்துறையில் சிக்கி கொள்ள வாய்ப்பு உள்ளது. அவ்வாறு அவர் வருமான வரி சோதனையில் சிக்கினால், அந்த பணம், நகை சந்தீப் லாலுக்கு கிடைக்க சாத்தியமில்லை என்ற தகவலும் ெவளியாகி உள்ளது.
Related Tags :
Next Story