கப்பலில் வேலை வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ.70 ஆயிரம் மோசடி


கப்பலில் வேலை வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ.70 ஆயிரம் மோசடி
x
தினத்தந்தி 8 April 2022 2:53 AM IST (Updated: 8 April 2022 2:53 AM IST)
t-max-icont-min-icon

ராதாபுரம் அருகே கப்பலில் வேலை வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ.70 ஆயிரம் மோசடி செய்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லை:
ராதாபுரம் அருகே உள்ள கூட்டப்புளி பகுதியை சேர்ந்தவர் வளன் ஆன்ட்ரோன் தினேஷ் (வயது 35). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது செல்போனில் முகநூல் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அதில் கப்பலில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒரு தகவல் இடம் பெற்றிருந்தது. உடனே அவர் அதில் உள்ள லிங்க்கை கிளிக் செய்து பார்த்தார். அப்போது அதில் செல்போன் எண் குறிப்பிடப்பட்டு இருந்தது. உடனே அவர் அந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மறுமுனையில் பேசிய நபர், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் அதிக சம்பளத்தில் கப்பலில் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு ரூ.70 ஆயிரம் தரவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதனை உண்மை என்று நம்பிய வளன் ஆன்ட்ரோன் தினேஷ் அந்த மர்ம நபரின் வங்கிக்கணக்குக்கு இணையதளம் மூலம் ரூ.70 ஆயிரத்தை அனுப்பியுள்ளார். ஆனால் அந்த நபர் வளன் ஆன்ட்ரோன் தினேசுக்கு வேலை வாங்கி தரவில்லை. அதன்பிறகு தான் அவருக்கு தன்னிடம் நூதன முறையில் மோசடி நடந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் வழக்குப்பதிவு செய்து, மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்.


Next Story