மணல் திருடிய 2 பேர் கைது
நரிக்குடி அருேக மணல் திருடிய 2 ேபரை போலீசார் கைது செய்தனர்.
காரியாபட்டி,
நரிக்குடி சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் இலுப்பைகுளத்திலிருந்து -உலக்குடி செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த லாரியில் அரசு அனுமதியின்றி 3 யூனிட் மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து நரிக்குடி போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர். லாரியை ஓட்டி வந்த டிரைவர் சூச்சனேரியை சேர்ந்த நாகூர் கனி (வயது 30), திருச்சுழியை சேர்ந்த ஜோதிபாசு (47) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story