ஆலங்குளத்தில் காமராஜர் சிலையை அகற்ற எதிர்ப்பு


ஆலங்குளத்தில் காமராஜர் சிலையை அகற்ற எதிர்ப்பு
x
தினத்தந்தி 8 April 2022 3:46 AM IST (Updated: 8 April 2022 3:46 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளத்தில் காமராஜர் சிலையை அகற்றக்கூடாது என்று முன்னாள் எம்.பி. ராமசுப்பு வலியுறுத்தி உள்ளார்.

ஆலங்குளம்:
முன்னாள் எம்.பி. எஸ்.எஸ்.ராமசுப்பு ஆலங்குளத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆலங்குளம் பஸ்நிலையம் எதிரில் தென்காசி-நெல்லை மெயின் ரோட்டில் காமராஜர் சிலை சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்த சிலை அங்குள்ள பொதுமக்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது நடைபெற்று வரும் நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை பணிகளுக்காக, ஆலங்குளத்தில் காமராஜர் சிலையை அகற்றக்கூடாது. இப்போது இருக்கும் இடத்திலேயே தொடர்ந்து இருக்க வேண்டும். இல்லாவிட்டால் தென்காசி, நெல்லை, அம்பை ஆகிய மூன்று சாலைகள் சந்திக்கும் பகுதியில் ரவுண்டானா அமைத்து அதில் காமராஜர் சிலையை நிறுவ இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத்திட்ட மாவட்ட வருவாய் அலுவலரிடம் நான் ஏற்கனவே வலியுறுத்தி இருந்தேன். இந்நிலையில் தற்போது நான்கு வழிச்சாலை பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள் ளதால் அதே கோரிக்கையை வலியுறுத்தி மீண்டும் மாவட்ட கலெக்டருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. 

ஆலங்குளத்தில் காமராஜர் சிலை தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை மூலம் காங்கிரஸ் பிரமுகர் ஒருவரின் வங்கிக்கணக்கில் ரூ.1.35 லட்சம் செலுத்தப்பட்டுள்ளது. கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல் பட்டதாக கூறி அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதற்கு வட்டார தலைவர் அலெக்சாண்டர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் பழனி நாடார் எம்.எல்.ஏ.விடம் பரிந்துரை செய்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக அவர் கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு கொடுத்தார்.

Next Story