ஆட்டோ மோதி பெண் பலி
ஆட்டோ மோதி பெண் உயிரிழந்தார்.
திருச்சி:
திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பிரசன்னா காலனியை சேர்ந்தவர் வெங்கடசுப்பிரமணியன். இவருடைய மனைவி ராதா (வயது 60). இவர் நேற்று இரவு ஸ்ரீரங்கம் அம்மாமண்டபத்தில் இருந்து ராஜகோபுரம் நோக்கி செல்லும் சாலையில் நடந்து சென்றார். அப்போது அவருக்கு பின்புறம் வந்த ஒரு ஆட்டோ எதிர்பாராதவிதமாக சாலையின் நடுவே இரும்புதடுப்பு கேட் மீது மோதி கவிழந்தது. அந்தசமயம் எதிர்புறம் வந்த மற்றொரு ஆட்டோ டிரைவர் பதற்றம் அடைந்து தான் ஓட்டி வந்த ஆட்டோவை சாலையின் ஓரத்தில் திருப்பினார். இதில் சாலையோரத்தில் நடந்து வந்த ராதா மீது ஆட்டோ மோதியதில் அவர் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து காட்சி அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. விபத்து குறித்து வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story