கோவில்பட்டி நகரசபையில் சொத்துவரி சீராய்வு செய்ய முடிவு
கோவில்பட்டி நகரசபை கூட்டத்தில் சொத்துவரியை சீராய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி நகரசபை கூட்டத்தில் சொத்துவரியை சீராய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.
நகரசபை கூட்டம்
கோவில்பட்டி நகரில் சொத்துவரி, காலிமனை வரி உயர்வு செய்து பொது சீராய்வு மேற்கொள்ள மன்றத்தின் அவசரக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு நகரசபை தலைவர் கா. கருணாநிதி தலைமை தாங்கினார். துணை தலைவர் ஆர்.எஸ். ரமேஷ் மற்றும் 34 கவுன்சிலர்கள், நகரசபை ஆணையாளர் ராஜாராம், பொறியாளர் ரமேஷ், சுகாதார அதிகாரி நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வரி சீராய்வு
கூட்டத்தில், 600 சதுர அடிக்கு குறைவான பரப்பளவில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 25 சதவீதம், 1200 சதுர அடி வரை உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதம், 1800 சதுர அடி வரை உள்ள குடியிருப்பு கட்டிடங் களுக்கு 75 சதவீதம், 1800 சதுர அடிக்கு அதிகமான பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 100 சதவீதமும், வணிகப் பயன்பாடு கட்டடங் களுக்கு 100 சதவீதம், தொழிற் சாலை பயன்பாட்டு கட்டடம் மற்றும் சுயநிதி பள்ளி மற்றும் கல்லூரி கட்டடங் களுக்கு தற்போது உள்ள சொத்து வரியில் 75 சதவீதம், காலிமனை வரி விதிப்பு ஒரு சதுர அடி நிலத்திற்கு தற்போதுள்ள அடிப்படை மதிப்பு 100 சதவீதம் உயர்வு செய்து காலி மனை வரி பொது சீராய்வு செய்யலாம் என்று கூட்டத்தில் தீர்மானம் வைக்கப்பட்டது.
கவுன்சிலர்கள் கருத்து
இதேபோல தெருக்கள் வாரியாக ஏ.பி. சி. என 3 மண்டலங் களாக பிரித்து சொத்து வரி விதிக்க பொருள் வைக்கப்பட்டது.
சொத்து வரி விதிப்பு மற்றும் தெருக்களை மண்டல வாரியாக பிரிப்பது தொடர்பாக உறுப்பினர்கள் பல்வேறு கருத்துக்களை கூறினார்கள் வரி விதிப்பு தொடர்பாக கவுன்சிலர்கள் கூறிய கருத்துக்களை ஆய்வு செய்து அடுத்த கூட்டத்தில் சொத்துவரி மற்றும் தெருக்களை மண்டல பிரிவினை தொடர்பாகவும் முடிவு செய்யப்படும் என்று நகரசபை தலைவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story