சமூக வலைத்தளங்களில் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்தவர் கைது


சமூக வலைத்தளங்களில் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்தவர் கைது
x
தினத்தந்தி 8 April 2022 8:03 PM IST (Updated: 8 April 2022 8:03 PM IST)
t-max-icont-min-icon

சமூக வலைத்தளங்களில் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்தவர் கைது ெசய்யப்பட்டார்.

வடமதுரை:
வடமதுரை அருகே உள்ள பாடியூர் கொசவபட்டியை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 43). இவர் தனது செல்போனில் பேஸ்புக், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகிறார். அதில் அவர் பெண்களின் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்து, பலருக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. இவரது நடவடிக்கையை சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். எனவே அவர்கள், சிதம்பரம் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு வடமதுரை போலீசாருக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிதம்பரத்தை கைது செய்தனர். மேலும் அவரது செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. அவரது சமூக வலைத்தள கணக்குகளை முடக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Next Story