2 பட்டியல் எழுத்தர்கள் பணியிடை நீக்கம்


2 பட்டியல் எழுத்தர்கள் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 8 April 2022 8:19 PM IST (Updated: 8 April 2022 8:19 PM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்டத்தில் வியாபாரிகளிடம் நெல் கொள்முதல் செய்ததால் 2 பட்டியல் எழுத்தர்களை பணியிடை நீக்கம் செய்து நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் உத்தரவிட்டார்.

வெளிப்பாளையம்:
நாகை மாவட்டத்தில் வியாபாரிகளிடம் நெல் கொள்முதல் செய்ததால் 2 பட்டியல் எழுத்தர்களை பணியிடை நீக்கம் செய்து நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் உத்தரவிட்டார்.
வியாபாரிகளிடம் நெல் கொள்முதல்
நாகை மாவட்டத்தில் உள்ள  அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுவதாக மாவட்ட கலெக்டருக்கு புகார்கள் வந்தன.  
இதையடுத்து கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவின் பேரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜகுமார் தலைமையில் துணைமேலாளர் ரங்கராஜன் கொண்ட குழுவினர் மாவட்டத்தில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்தனர்.
பட்டியல் எழுத்தர்கள் பணியிடை நீக்கம்
இந்த ஆய்வின்போது நாகை அருகே மோகனூர் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் வியாபாரியிடம் இருந்து 450 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டது தெரிய வந்தது. 
இதனைத்தொடர்ந்து அந்த கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தர் கேசவனை பணியிடை நீக்கம் செய்து நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜகுமார் உத்தரவிட்டார். 
இதேபோல் நாகை அருகே சின்னதம்பூர் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் வியாபாரியிடம் நெல் கொள்முதல் செய்ததால் பட்டியல் எழுத்தர் கலைச்செல்வனையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Next Story