தூத்துக்குடியில் தொழிலாளிக்கு கொலைமிரட்டல்; 3 வாலிபர்கள் கைது


தூத்துக்குடியில் தொழிலாளிக்கு கொலைமிரட்டல்;  3 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 8 April 2022 8:24 PM IST (Updated: 8 April 2022 8:24 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் தொழிலாளிக்கு கொலைமிரட்டல் விடுத்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, திருச்செந்தூர் ரோடு பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்த, தூத்துக்குடி சிலோன்காலணியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் மகன் சின்னமுத்து (38), புதுகிராமத்தை சேர்ந்த சுயம்புலிங்கம் மகன் கார்த்திக் (32) மற்றும் கணேஷ்புரத்தைச் சேர்ந்த முருகவேல் மகன் விக்ணேஷ் (25) ஆகிய 3 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் அந்த பகுதியில் வந்த தொழிலாளி ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு கொலைமிரட்டல் விடுத்தது தெரியவந்தது.  இது குறித்து தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது ெசய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story