தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல்
போடியில் தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தலை தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் திறந்து வைத்தார்.
போடி:
போடி பஸ் நிலையம் அருகில் தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு நகராட்சி தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் தலைமை தாங்கினார். நகராட்சி முன்னாள் துணை தலைவரும், கவுன்சிலருமான சங்கர், தி.மு.க. நகர முன்னாள் செயலாளர்கள் முகம்மது பசீர், ராஜா ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் நீர்மோர் பந்தலை திறந்து வைத்து தர்பூசணி, நீர்மோர் மற்றும் குளிர்பானம் ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார்.
பின்னர் தங்கதமிழ்ச்செல்வன் நிருபர்களிடம் கூறுகையில், இன்று (சனிக்கிழமை) மாலையில், போடி பழைய பஸ் நிறுத்தம், அண்ணா பள்ளி அருகில் தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், அரசின் நிதிநிலை அறிக்கையை விளக்கியும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் கூட்டுறவு துறை அமைச்சரும், துணை பொதுச்செயலாளருமான இ.பெரியசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். கூட்டத்தில் தேனி வடக்கு மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள், பேரூர் செயலாளர்கள், உள்ளாட்சி மன்றத் தலைவர்கள், பேரூர் மன்ற தலைவர்கள் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், நகர் கிளை செயலாளர்கள், நகரப் பிரமுகர்கள், ஒன்றிய செயலாளர்கள், போடி ஒன்றிய பிரதிநிதிகள், நகர ஒன்றியம் சார்பு அணி அமைப்பாளர்கள், முன்னாள் ஊராட்சி செயலாளர்கள், ஒன்றிய பேரூர் பிரதிநிதிகள், நகர, ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர் என்றார்.
விழாவில் போடி நகராட்சி கவுன்சிலர்கள், தி.மு.க. பிரமுகர்கள் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் ராஜசேகரன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story