வாலிபரை போலீசார் துன்புறுத்தினார்களா?
தேவதானப்பட்டி அருகே திருட்டு வழக்கில் கைதான வாலிபரை போலீசார் துன்புறுத்தினரா என்பது குறித்து விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவிட்டுள்ளார்.
தேனி:
தேவதானப்பட்டி அருகே உள்ள ஜி.கல்லுப்பட்டியை சேர்ந்தவர் ரிஷாத்ராஜ் (வயது 24). இவரை ஒரு திருட்டு வழக்கில் ஜெயமங்கலம் போலீசார் கைது செய்தனர். பின்னர் காயம் காரணமாக அவரை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். சிகிச்சை முடிந்து மீண்டும் பெரியகுளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
போலீசார் விசாரணையின் போது ரிஷாத்ராஜை தாக்கி, சித்ரவதை செய்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story