கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு வாழைக்கன்று நட்டு ஆர்ப்பாட்டம்
கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு வாழைக்கன்று நட்டு ஆர்ப்பாட்டம்
தாராபுரம்:
தாராபுரத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பாக வாழைக் கன்று நட்டு கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் கோட்டத்தலைவர் கே.வெங்கடசாமி தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
இதில் சாலைப் பணியாளர்கள் நீக்கப்பட்ட 41 மாத காலத்தை பணி காலமாக கணக்கிட்டு அதற்கான சம்பளத்தை தமிழக அரசு வழங்க வேண்டும். தொழில்நுட்ப கல்வித்திறன் பெறாத ஊழியர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். நெடுஞ்சாலை பராமரிப்பு பணியை தனியாருக்கு வழங்கும் கொள்கை முடிவை கைவிட வேண்டும். பணிநீக்க காலத்திலும், பணிக்காலத்திலும் இறந்த சாலை பணியாளர்கள் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தாராபுரம் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கோட்டத் துணைத்தலைவர்கள், மாரிமுத்து, தங்கவேல், கோட்ட செயலாளர் தில்லையப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story