நாட்டறம்பள்ளி அருகே கார் டயர் வெடித்து 7 கல்லூரி மாணவர்கள் படுகாயம்


நாட்டறம்பள்ளி அருகே கார் டயர் வெடித்து 7 கல்லூரி மாணவர்கள் படுகாயம்
x
தினத்தந்தி 8 April 2022 10:06 PM IST (Updated: 8 April 2022 10:06 PM IST)
t-max-icont-min-icon

நாட்டறம்பள்ளி அருகே கார் டயர் வெடித்து 7 கல்லூரி மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

ஜோலார்பேட்டை

வாணியம்பாடி தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படிக்கும் காவலூரை சேர்ந்த குணசீலன் (வயது 22) வாணியம்பாடி ஜலீத் (21), சதீஷ் (22), வளத்தூர் பகுதியை சேர்ந்த ஜெயபிரசாத் (20), குடியாத்தம் அஜித் குமார் (21), வீரமணி (20) உள்பட 7 பேர் வாணியம்பாடியில் இருந்து கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காரில் சென்றனர். வாணியம்பாடி பகுதியை சேர்ந்த அன்வர் பாஷா மகன் முபாரக் (22) காரை ஓட்டினார்.

நாட்டறம்பள்ளி அருகே உள்ள வெலக்கல்நத்தம் பகுதியில் கார் சென்றபோது காரின் முன் பக்க டயர் வெடித்தது. இதனால் கார் நிலை தடுமாறி தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவர் மீது பயங்கர சத்தத்துடன் மோதியது. இதில் காரில் இருந்த 7 மாணவர்களும் படுகாயம் அடைந்தனர். இதை பார்த்த பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம்அவர்களை சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வீரமணி சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

Next Story