கஞ்சா, சாராயம் வைத்திருந்த 3 பேர் கைது


கஞ்சா, சாராயம் வைத்திருந்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 8 April 2022 10:14 PM IST (Updated: 8 April 2022 10:14 PM IST)
t-max-icont-min-icon

ரிஷிவந்தியம் அருகே கஞ்சா, சாராயம் வைத்திருந்த 3 பேரை போலீசாா் கைது செய்தனர்.

ரிஷிவந்தியம், 

ரிஷிவந்தியம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கீழ்ப்பாடி, பாவந்தூர் கிராமத்தில் வீட்டின் பின்புறம் சாராயம் மற்றும் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த சிங்காரவேலு (வயது 52), கலியன் மகன் ரஜினி (33) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்த தலா 100 கிராம் கஞ்சா மற்றும் 3 லிட்டா் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. 

இதேபோல் திருக்கோவிலூர் சந்தப்பேட்டை பகுதியில் கஞ்சா மற்றும் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஏழுமலை மகன் வல்லரசு(20) என்பவரை திருக்கோவிலூர் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த 5 லிட்டர் சாராயம் மற்றும் 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 

Next Story