கார்கள் மோதல் டிரைவர் பலி


கார்கள் மோதல் டிரைவர் பலி
x
தினத்தந்தி 8 April 2022 10:18 PM IST (Updated: 8 April 2022 10:18 PM IST)
t-max-icont-min-icon

மேல்மலையனூர் அருகே கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் டிரைவர் பலியானாா்.

திண்டிவனம், 

சென்னை கே.கே.நகரை சேர்ந்தவர் விஜயராகவன்(வயது 68). இவருடைய மனைவி மல்லிகா(62). இவர்கள் இருவரும் வாடகை காரில் மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு வந்து கொண்டிருந்தனர். சென்னை ஏழுகிணறு பகுதியை சேர்ந்த அசோக்குமார் (51) காரை ஓட்டிவந்தார். மேல்மலையனூர் அருகே வணக்கம்பாடியில் விஜயராகவன் சென்ற காரும், எதிரே வந்த மற்றொரு காரும் நேருக்கு நேர் மோதியது. இதில் டிரைவர் அசோக்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். 
மேலும் விஜயராகவன், மல்லிகா, மற்றொரு காரில் வந்த விழுப்புரம் மரகத ராஜபுரத்தை சேர்ந்த வேல்முருகன்(35), வள்ளி(47), ரஞ்சிதம்(27), தனுவந்த்(1) ஆகியோர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த வளத்தி போலீசார் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி செய்யப்பட்டு மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான அசோக்குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story