புஷ்ப பல்லக்கில் முத்துமாரியம்மன் வீதி உலா


புஷ்ப பல்லக்கில் முத்துமாரியம்மன் வீதி உலா
x
தினத்தந்தி 8 April 2022 10:28 PM IST (Updated: 8 April 2022 10:28 PM IST)
t-max-icont-min-icon

புஷ்ப பல்லக்கில் முத்துமாரியம்மன் வீதி உலா நடந்தது.

இளையான்குடி, 
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவையொட்டி தென் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து இந்த விழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி இரவு காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி இரவு சிம்ம வாகனம், குதிரை வாகனம் காமதேனு வாகனம், அன்ன வாகனம் மற்றும் பூத வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். தொடர்ந்து முக்கிய திருவிழாவான பொங்கல் விழா மற்றும் தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது. இதனை அடுத்து பால்குடம் மற்றும் ஊஞ்சல் உற்சவம், புஷ்ப பல்லக்கில் முத்துமாரி அம்மன் எழுந்தருளி வீதி உலா வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. 
தீர்த்தவாரி உற்சவத்துடன் பங்குனி திருவிழா நிறைவுபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பிராந்தமங்கலம் வெள்ளைச்சாமித்தேவர் குடும்பத்தார்கள், திருப்பத்தூர் மத்திய கூட்டுறவு வங்கி சரக மேற்பார்வையாளர் வி.போஸ் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள், வியாபார பெருங்குடி மக்கள் கலந்து கொண்டனர். திருவிழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் மு.வெங்கடேசன் செட்டியார் மற்றும் நிர்வாக அலுவலர்கள் செய்திருந்தனர்.

Next Story