கச்சிராயப்பாளையம் போலீஸ்காரர் பணியிடை நீக்கம்


கச்சிராயப்பாளையம் போலீஸ்காரர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 8 April 2022 10:31 PM IST (Updated: 8 April 2022 10:31 PM IST)
t-max-icont-min-icon

கச்சிராயப்பாளையம் போலீஸ்காரரை பணியிடை நீக்கம் செய்து சூப்பிரண்டு செல்வக்குமார் உத்தரவிட்டார்.

கச்சிராயப்பாளையம், 

கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வருபவர் கண்ணன். இவர் காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வக்குமாருக்கு புகார் சென்றது. இதையடுத்து முதல்நிலை காவலர் கண்ணனை பணியிடை நீக்கம்(சஸ்பெண்டு) செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வக்குமார் உத்தரவிட்டார். மேலும் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான கஞ்சா, குட்கா மற்றும் சாராயம் காய்ச்சுதல், கடத்துதல், விற்பனை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளிடம் தொடர்பில் இருந்து காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் குற்றச்செயல்களில் காவல்துறையினர் ஈடுபட்டாலோ அல்லது துணைபோனாலோ அவர்கள் மீது துறை ரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Next Story