புவனகிரி அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் சாவு
புவனகிரி அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் உயிரிழந்தாா்.
புவனகிரி,
கடலூர் புதுநகர் அருகே உள்ள பச்சையாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் குரு. இவருடைய மகன் தினேஷ்குமார் (வயது 24). இவர் கடலூர் பச்சையாங்குப்பம் பகுதியில் இருந்து, மோட்டார் சைக்கிளில் புவனகிரி வழியாக சேத்தியாத்தோப்புக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, புவனகிரி தாலுகா அலுவலகம் அருகே சென்ற போது, முன்னாள் சென்ற லாரி மீது எதிர்பாராதவிதமாக தினேஷ்குமார் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயமடைந்த தினேஷ்குமார் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே தினேஷ்குமார் இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து அவரது தாய் விஜயலட்சுமி புவனகிரி போலீசில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி சந்தோஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story