பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்
பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்
திருப்பூர்,
திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமை தாங்கினார். ஏழை, எளிய மக்களை வாட்டி வதைக்கும் சொத்துவரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் இளைஞரணி மாநில தலைவர் வினோத் பி.செல்வம் பேசும்போது, ‘தி.மு.க. அரசு சட்டமன்ற தேர்தலின்போது பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வெற்றி பெற்றது. ஆட்சிக்கு வந்த பின்னர் வாக்களித்த மக்களின் வயிற்றில் அடிக்கும் வகையில் சொத்துவரி உயர்வை அறிவித்துள்ளது. தி.மு.க. அரசு மாநகராட்சியில் 150 சதவீதம் சொத்துவரியை அதிகப்படுத்தியுள்ளது. 150 சதவீதம் வரியை போடுங்கள் என்று மத்திய அரசு தமிழக அரசிடம் கூறவில்லை. மக்களின் வயிற்றில் அடிப்பது தான் திராவிட மாடலா?. சொத்துவரி உயர்வை திரும்ப பெறும் வரை பா.ஜனதா கட்சி தொடர்ந்து போராட்டம் நடத்தும். பெண்கள், மக்களை திரட்டி போராட்டம் வலுப்பெறும்’ என்றார்.
இதில் மாநில செயலாளர் மலர்க்கொடி, செயற்குழு உறுப்பினர் சின்னசாமி, பொதுச்செயலாளர் சீனிவாசன், கதிர்வேல், பொருளாளர் குணசேகரன், மாவட்ட, மண்டல அணி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.
Related Tags :
Next Story