கபடி போட்டியில் அழகப்பா கல்லூரி அணி வெற்றி
கபடி போட்டியில் அழகப்பா கல்லூரி அணி வெற்றி பெற்றது.
காரைக்குடி,
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உடற் கல்வியியல் கல்லூரி மாணவர்கள் விராச்சிலையில் நடைபெற்ற மாநில அளவிலான 65 கிலோ எடை பிரிவினருக்கான கபடி போட்டியில் பங்கேற்றனர். போட்டியில் பல்வேறு மாவட் டங்களைச் சேர்ந்த 32 அணிகள் பங்கு பெற்றன. இதில் அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் அணி சிறப்பாக விளையாடி முதலிடத்தை பெற்று ரொக்கப்பரிசு மற்றும் வெற்றிக் கோப்பையை வென்றது. வெற்றி பெற்றவர்கள் பயிற்சியாளர் யோகா தலைமையில் அழகப்பா பல்கலைக் கழக துணைவேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் முனை வர் சுவாமிநாதன், பேராசிரியர் கருப்புசாமி பல்கலைக்கழக பதிவாளர் சேகர், பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் செந்தில் குமரன், உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் ராஜ லட்சுமி ஆகியோரிடம் வாழ்த்து பெற்றனர்.
Related Tags :
Next Story