ரேஷன் விற்பனையாளர் பணிக்கான அறிவிப்பு ரத்து


ரேஷன் விற்பனையாளர் பணிக்கான அறிவிப்பு ரத்து
x
தினத்தந்தி 8 April 2022 11:20 PM IST (Updated: 8 April 2022 11:20 PM IST)
t-max-icont-min-icon

ரேஷன் விற்பனையாளர் பணிக்கான அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்கள் நடத்தும் நியாயவிலைக்கடைகளில் காலியாக உள்ள 40 விற்பனையாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு 17.12.2020 முதல் 31.12.2020 வரை நேர்முகத்தேர்வு நடைபெற்றது.
 இந்த நிலையில் 25.8.2021-ந்தேதி நடைபெற்ற மானியக் கோரிக்கையின் போது கூட்டுறவுத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கடிதம்  17.11.2021-ல் தெரிவிக்கப்பட்டு உள்ளபடி 2020-ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் மூலம் விற்பனையாளர்கள் காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக ராமநாதபுரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணைப் பதிவாளர் மற்றும் தலைவர் தெரிவித்துள்ளார்.

Next Story