சிவகாசியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்


சிவகாசியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 April 2022 11:24 PM IST (Updated: 8 April 2022 11:24 PM IST)
t-max-icont-min-icon

சொத்து வரி உயர்வை கண்டித்து சிவகாசியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகாசி, 
சொத்து வரி உயர்வை கண்டித்து சிவகாசியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
ஆர்ப்பாட்டம் 
சொத்து வரி உயர்வை கண்டித்து சிவகாசி பஸ் நிலையம் அருகில் பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்துக்கு மேற்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பார்த்தசாரதி முன்னிலை வகித்தார். ஒலிம்பிக் செல்வம் வரவேற்றார். 
இதில் பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் மகாலட்சுமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- 
தி.மு.க. அரசு 150 சதவீதம் சொத்து வரியை உயர்த்தி உள்ளது. அதனை வன்மையாக கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. மக்கள் நலன் காக்கும் பா.ஜ.க. கட்சி இந்த போராட்டத்தை தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறது. 
குடும்ப அரசியல் 
 நாட்டு மக்களின் நலனை பற்றி கவலைப்படாமல், ஸ்டாலின் தனது வீட்டு நலன் பற்றி தான் கவலைப்பட்டு வருகிறார்.
 காங்கிரசும், தி.மு.க.வும் குடும்ப அரசியல் செய்து கொண்டு இருக்கிறது. மக்கள் நலனில் அதிக அக்கறை கொண்டதால் தான் மோடியை மக்கள் 2-வது முறையாக பிரதமராக தேர்வு செய்தனர். 
இந்தியாவில் பா.ஜ.க. ஊழலற்ற ஆட்சி செய்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். 
ஆர்ப்பாட்டத்தின் போது பாண்டுரங்கன், சுரேஷ்குமார், முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகச்சாமி, பாட்டக்குளம் பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story