போலுப்பள்ளியில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
போலுப்பள்ளியில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
குருபரப்பள்ளி:
கிருஷ்ணகிரி அருகே போலுப்பள்ளி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி மங்கள இசை, கணபதி ஹோமம், கங்கனம் கட்டுதல் மற்றும் கொடி ஏற்றுதல் ஆகியவை நடந்தது. தொடர்ந்து சாமி கரிகோல உற்சவமும், கோபுரத்தில் தானியம் நிரப்புதல், கலச ஆராதனை, கணபதி பூஜை, கணபதி ஹோமம், முதற்கால ஹோமம், தீபாராதனை, பிரசாத வினியோகம், நாடி சந்தானம் ஆகியவை நடந்தது. நேற்று காலை துவாரபூஜை, கலச ஆராதனை, இரண்டாம் கால வேள்வி பூஜை, தீபாராதனையும், கலச புறப்பாடு மற்றும் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story