விவசாய நிலங்கள் வழியாக பெட்ரோலிய குழாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த 3 பேர் கைது
விவசாய நிலங்கள் வழியாக பெட்ரோலிய குழாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே உள்ள வடக்குதெரு கொட்டாவூர் கிராமத்தில் விவசாய விளை நிலங்கள் வழியாக பெட்ரோலிய குழாய் அமைக்கும் பணி நேற்று நடைபெற்றது. இதற்கு அந்த பகுதியை சேர்ந்த விவசாயி வேலு (வயது60), அவரது மகன் வேலவன் (30), உறவினர் பிரபு (40) ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார், 3 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து தாசில்தார் வினோதா முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் பெட்ரோலிய குழாய் அமைக்க பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது. பின்னர் வேலுவின் மனைவி மாது கைது செய்யப்பட்ட 3 பேரையும் விடுவிக்க கோரி பொக்லைன் எந்திரத்தின் முன்பு அமர்ந்து கொண்டு தங்களது நிலத்தில் பணிகளை செய்யக்கூடாது என்று மண்ணை வாரி இறைத்து கதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story