கால்நடை வளர்ப்போருக்கு மானியத்துடன் புல் அறுக்கும் எந்திரங்கள் கலெக்டர் திவ்யதர்சினி வழங்கினார்
தர்மபுரியில் கால்நடை வளர்ப்போருக்கு மானியத்துடன் புல் அறுக்கும் எந்திரங்களை கலெக்டர் திவ்யதர்சினி வழங்கினார்.
தர்மபுரி:
தர்மபுரியில் கால்நடை வளர்ப்போருக்கு மானியத்துடன் புல் அறுக்கும் எந்திரங்களை கலெக்டர் திவ்யதர்சினி வழங்கினார்.
புல் அறுக்கும் எந்திரங்கள்
தர்மபுரி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை வளர்ப்போருக்கு தேசிய கால்நடை இயக்கம் 2020-2021-ன் கீழ் மானியத்துடன் கூடிய புல் அறுக்கும் எந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி தர்மபுரியில் உள்ள மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் திவ்யதர்சினி கலந்து கொண்டு 50 கால்நடை வளர்க்கும் பயனாளிகளுக்கு தலா ரூ.15 ஆயிரம் மானியத்துடன் மொத்தம் ரூ.13 லட்சத்து 21 ஆயிரத்து 600 மதிப்பில் புல் அறுக்கும் எந்திரங்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் இளங்கோவன், துணை இயக்குனர் வேடியப்பன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.
விழிப்புணர்வு
இந்த நிகழ்ச்சியில் பசுந்தீவன பயிர்களை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கால்நடைகளுக்கு தீவனமாக அளிக்கும் போது அவை எளிதில் ஜீரணமாகி விடுகிறது. இதனால் கால்நடைகளின் பால் உற்பத்தி திறன் அதிகரிக்கும் என்று எடுத்துக்கூறி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Related Tags :
Next Story