அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு


அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
x
தினத்தந்தி 8 April 2022 11:53 PM IST (Updated: 8 April 2022 11:53 PM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு நடைபெற்றது.

தா.பழூர்
அரியலூர் மாவட்டம், தா.பழூர் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. தா.பழூர் சுத்தமல்லி பிரிவு சாலையில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலை அருகில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. இதில் கிழக்கு ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன் வரவேற்றுப்பேசினார். அரியலூர் மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் தலைமை தாங்கி தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி, நீர் மோர், இளநீர், வெள்ளரிப்பிஞ்சு போன்றவற்றை வழங்கி தொடங்கி வைத்தார். இதில் ஜெயங்கொண்டம் முன்னாள் எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம், தா.பழூர் ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமி வீரமணிகண்டன் உள்பட கட்சி பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் மேற்கு ஒன்றிய செயலாளர் அசோகன் நன்றி கூறினார். 

Next Story