வேன் மோதி பொக்லைன் ஆபரேட்டர் பலி


வேன் மோதி பொக்லைன் ஆபரேட்டர் பலி
x
தினத்தந்தி 8 April 2022 11:58 PM IST (Updated: 8 April 2022 11:58 PM IST)
t-max-icont-min-icon

வேன் மோதி பொக்லைன் ஆபரேட்டர் பலியானார்.

வெண்ணந்தூர்:
சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை சேரந்தவர் பழனி மகன் செல்லமுத்து (வயது 45). பொக்லைன் ஆபரேட்டர். இவர் நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை அடுத்த தேங்கல்பாளையம் பகுதியில் வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை வீட்டிற்கு செல்லவதற்காக பொக்லைன் எந்திரத்தை நிறுத்திவிட்டு நடந்து சென்றார். தேங்கல்பாளையம் தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போது, சேலத்தில் இருந்து வேகமாக வந்த பால் வேன் செல்லமுத்து மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் வெண்ணந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பால் வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.

Next Story