பட்டா மாறுதல் முகாம்
கொங்கன்குளம் கிராமத்தில் பட்டா மாறுதல் முகாம் நடைபெற்றது.
ஆலங்குளம்,
ஆலங்குளம் அருகே உள்ள கொங்கன்குளம் கிராமத்தில் பட்டா மாறுதல் முகாம் வெம்பக்கோட்டை தாசில்தார் ரெங்கநாதன் ஆலோசனையின்பேரில் வெம்பக்கோட்டை துணைதாசில்தார் பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது. பெயர் மாற்றம், வாரிசு மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 44 மனுக்கள் அளிக்கப்பட்டன. இதில் 20 மனுக்களுக்கு உடன் நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. இதில் ஆலங்குளம் வருவாய் ஆய்வாளர் அறிவழகன், கொங்கன்குளம் கிராம நிர்வாக அலுவலர் சக்தி கணேஷ், கொங்கன்குளம் ஊராட்சி தலைவர் பாலகிருஷ்ணன், கிராம உதவியாளர் முருகன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story