பள்ளி மாணவர்களுக்கு நுகர்வோர் விழிப்புணர்வு
பள்ளி மாணவர்களுக்கு நுகர்வோர் விழிப்புணர்வு நடைபெற்றது.
பாடாலூர்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா கொளக்காநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளியின் தலைமையாசிரியர் சுரேஷ் வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக நுகர்வோர் மன்ற பொறுப்பு நீதிபதி (ஓய்வு) அன்பழகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், பொதுமக்கள் பொருட்களை வாங்கும் போது அதன் தரம் மற்றும் காலாவதி தேதி முதலியவற்றை உற்று பார்க்க வேண்டும். அதில் ஏதேனும் குறைபாடு இருப்பின் நுகர்வோர் மன்றத்தில் முறையாக தெரிவிக்க வேண்டும் என்றார். தொடர்ந்து ஆலத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் சுதாகர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நுகர்வோர் மன்றம் கதிரவன் ஆகியோர் பேசினர். முடிவில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story