வரத்து குறைவால் வாழைத்தார் விலை உயர்ந்தது


வரத்து குறைவால் வாழைத்தார் விலை உயர்ந்தது
x
தினத்தந்தி 9 April 2022 12:37 AM IST (Updated: 9 April 2022 12:37 AM IST)
t-max-icont-min-icon

வரத்து குறைவால் வாழைத்தார் விலை உயர்ந்தது. பூவன் வாழைத்தார் ரூ.350-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நொய்யல், 
வாழை விவசாயிகள்
நொய்யல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மரவாபாளையம், சேமங்கி, நடையனூர், பாலத்துறை, தவுட்டுப்பாளையம், நஞ்சைபுகழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வாழைகளை பயிரிட்டு வருகின்றனர். வாழைத்தார்கள் முதிர்ச்சி அடையும் தருவாயில் அதனை வெட்டி உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் ரூ.300-க்கும், ரஸ்தாலி ரூ.250-க்கும், பச்சை நாடன் ரூ.200-க்கும், கற்பூரவல்லி ரூ.250-க்கும், மொந்தன் ரூ.150-க்கும் விற்பனையானது.
பூவன் தார் ரூ.350-க்கு விற்பனை
நேற்று முன்தினம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் ரூ.350-க்கும், ரஸ்தாலி ரூ.300-க்கும், பச்சை நாடன் ரூ.250-க்கும், கற்பூரவல்லி ரூ.300-க்கும், மொந்தன் ரூ.200-க்கும் விற்பனையானது. வரத்து குறைவாலும், கோவில் விசேஷங்கள் தொடர்ந்து வருவதாலும் வாழைத்தார் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் வாழைத்தார் பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story