தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.18 லட்சம் மோசடி


தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.18 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 9 April 2022 1:41 AM IST (Updated: 9 April 2022 1:41 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.18 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக மேலாளர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம்:-
மேச்சேரியில் வெளிமாநில நிதி நிறுவனத்தின் கிளை ஒன்று உள்ளது. இங்கு ஏராளமானவர்கள் தங்க நகைகள் அடமானம் வைத்து உள்ளனர். இந்த நிதி நிறுவனத்தில் அதிகாரிகள் தணிக்கை செய்தனர். அப்போது வாடிக்கையாளர்களின் பெயரில் நகைகள் அடமானம் பெறாமல் கடன் தொகை கொடுத்து இருப்பது தெரிய வந்தது. 17 பேரின் பெயரில் 578 கிராம் தங்க நகைகள் அடமானம் வைத்தது போல் கணக்கு எழுதி ரூ.18 லட்சம் மோசடி செய்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி நிதி நிறுவனம் சார்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ்விடம் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் நிதி நிறுவன மேலாளர் உள்பட 2 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story