குடிநீர் கேட்டு பெண்கள் தர்ணா போராட்டம்
ஓமலூர் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
ஓமலூர்:-
ஓமலூர் அருகே கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி குண்டூர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் வாரம் ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்வதாக தெரிகிறது. இதனால் போதிய குடிநீர் இன்றி பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர்.
இது தொடர்பாக ஊராட்சி செயலாளர் மற்றும் காடையாம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் புகார் தெரிவித்து இருந்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி பெண்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை குண்டூர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அருகே ரோட்டில் அமர்ந்து காலி குடங்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தீவட்டிப்பட்டி போலீசார், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story