கோபி நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு


கோபி நகராட்சி கூட்டத்தில்  அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
x
தினத்தந்தி 9 April 2022 1:44 AM IST (Updated: 9 April 2022 1:44 AM IST)
t-max-icont-min-icon

கோபி நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

கோபி நகராட்சி அவசர கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார். ஆணையாளர் பிரேம் ஆனந்த் முன்னிலை வகித்தார். 
இந்த கூட்டத்தில் சொத்து வரி உயர்வு குறித்த தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டிருந்தது. எனவே சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நகராட்சி கூட்டத்துக்கு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 12 பேர் கருப்பு பட்டை (பேட்ஜ்) அணிந்து வந்திருந்தனர். 
சொத்து வரி உயர்வு குறித்த தீர்மானம் கொண்டு வரும்போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் எனக்கூறியும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் சிறிது நேரத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மீண்டும் வந்து கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதைத்ெதாடர்ந்து தீர்மானங்கள் குறித்த உறுப்பினர்கள் கேள்விக்கு நகராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகள் பதில் அளித்தனர். 

Next Story