வாலிபரிடம் பணம் பறித்த ரவுடி கைது


வாலிபரிடம் பணம் பறித்த ரவுடி கைது
x
தினத்தந்தி 9 April 2022 1:49 AM IST (Updated: 9 April 2022 1:49 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் வாலிபரிடம் பணம் பறித்த ரவுடி கைது செய்யப்பட்டார்.

மதுரை,

மதுரை தெற்குவாசல் எழுத்தாணிக்கார தெருவைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 28).சம்பவத்தன்று இவர் பழங்காநத்தம் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வாலிபர் ஒருவர் வந்தார். அவர் கத்தியை காட்டி ஜனார்த்தனிடமிருந்து 500 ரூபாயை பறித்து சென்றார். இது குறித்து சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். அதில் பழங்காநத்தம் ஆர்.சி.தெருவை சேர்ந்த பிரபல ரவுடியான யாசின் முகமது அலி (24) என்பதும், அவர் மீது 34 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. அதை தொடர்ந்த போலீசார் அவர் இருக்கும் இடம் அறிந்து அங்கு தேடி சென்றனர். அப்போது யாசின்முகமதுஅலி சுவரில் ஏறி குதித்து தப்பிக்க முயன்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்தார். அதில் அவருக்கு கையில் பலத்த அடிபட்டது. இதையடுத்து யாசின் முகமது அலியை போலீசார் கைது செய்து சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story