தாளவாடி, கொடுமுடி, ஊஞ்சலூர் பகுதியில் மிதமான மழை


தாளவாடி, கொடுமுடி, ஊஞ்சலூர் பகுதியில்   மிதமான மழை
x
தினத்தந்தி 9 April 2022 2:10 AM IST (Updated: 9 April 2022 2:10 AM IST)
t-max-icont-min-icon

தாளவாடி, கொடுமுடி, ஊஞ்சலூர் பகுதியில் மிதமான மழை பெய்தது.

தாளவாடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கடும் வெயில் வாட்டி வருவதும், அவ்வப்போது மழை பெய்வதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக காணப்பட்டது. மதியம் 3 மணி அளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
அதன்பின்னர் மழை பெய்ய தொடங்கியது. தாளவாடி, நெய்தாளபுரம், பாரதிபுரம், ராமபுரம், இக்களூர் ஆகிய பகுதியில் சுமார் 20 நிமிடம் மிதமான மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவி வருகிறது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதேபோல் ஊஞ்சலூர் பகுதியில் நேற்று காலையில் இருந்தே கடுமையான வெயில் வாட்டி வந்தது. இந்தநிலையில் மாலை 5 மணி அளவில் திடீரென காற்று பலமாக வீசியது. தொடர்ந்து மழை பெய்தது. சுமார் 15 நிமிடம் பலத்த மழை பெய்து ஓய்ந்தது. கொடுமுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 4.30 மணி முதல் சுமார் ஒரு மணி நேரம் மழை தூறியது.

Related Tags :
Next Story