எஸ்.கே.எம். எண்ணெய் ஆலை கலவர வழக்கில் கைது செய்யப்பட்ட 40 பேர் சிறையில் அடைப்பு
எஸ்.கே.எம். எண்ணெய் ஆலை கலவர வழக்கில் கைது செய்யப்பட்ட 40 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
எஸ்.கே.எம். எண்ணெய் ஆலை கலவர வழக்கில் கைது செய்யப்பட்ட 40 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கலவரம்
மொடக்குறிச்சி அருகே உள்ள நஞ்சை ஊத்துக்குளியில் எஸ்.கே.எம். பூர்ணா என்ற தனியார் எண்ணெய் ஆலை உள்ளது.
இந்த ஆலையில் பீகார் மாநிலம் கிழக்கு செம்பரம் மாவட்டம் பக்ரிகாயல் அருகே உள்ள ராம்குருவா பகுதியை சேர்ந்த காமோத்ராம் (வயது 30) என்ற தொழிலாளியும் வேலை செய்து வந்தார்.
சம்பவத்தன்று ஆலைக்கு எண்ணெய் பாரம் ஏற்றிச்செல்ல வந்த டேங்கர் லாரியில் காமோத்ராம் சிக்கி உயிரிழந்தார்.
இதையடுத்து காமோத்ராம் உடலை ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
போராட்டம்
இதுபற்றி அறிந்ததும் வடமாநில தொழிலாளர்கள் ஒன்று திரண்டு வந்தனர். அங்கு சென்று, இறந்த காமோத்ராம் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி திடீர் வன்முறையில் ஈடுபட்டனர். மேலும் தாக்குதலில் போலீசார், ஆலை பணியாளர்கள் தாக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வடமாநில தொழிலாளர்கள் 40 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களுக்கு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து 38 பேர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் 18 வயதுக்கு கீழே உள்ள 2பேர் கோவை சிறுவர் சீர்திருத்த கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆலையில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவை வைத்து தப்பியோடிய குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story