போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்யப்பட்ட ரூ.36 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்பு


போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்யப்பட்ட ரூ.36 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்பு
x
தினத்தந்தி 9 April 2022 3:02 AM IST (Updated: 9 April 2022 6:02 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்யப்பட்ட ரூ.36 லட்சம் மதிப்பிலான நிலத்தை நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் மீட்டனர்.

நெல்லை:

பணகுடி, லெவிஞ்சிபுரத்தை சேர்ந்த சாரதா என்பவருக்கு சொந்தமான 2 ஏக்கர் 40 சென்ட் நிலம் லெவஞ்சிபுரம் பகுதியில் உள்ளது. அந்த இடம் போலி ஆவணம் மூலம்‌ வேறு ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதேபோல் மானூர் அருகே உள்ள தென்கலத்தை சேர்ந்த செல்வமணி என்பவருக்கு சொந்தமான 70 சென்ட் நிலம் தென்கலம் பகுதியில் உள்ளது. அந்த இடமும் போலி ஆவணம் மூலம் வேறு ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இவர்கள் நெல்லை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபால் பர்னபாசிடம் புகார் செய்தனர். 

இதைத்தொடர்ந்து நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு சாரதாவிற்கு சொந்தமான ரூ.22 லட்சம் மதிப்பிலான நிலத்தையும், செல்வமணிக்கு சொந்தமான ரூ.14 லட்சம் மதிப்பிலான நிலத்தையும் மீட்டு அதற்கான ஆவணத்தை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் நில உரிமையாளர்களிடம் வழங்கினார்.

Next Story