500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 9 April 2022 3:18 AM IST (Updated: 9 April 2022 3:18 AM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டத்தில் 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

குழித்துறை:
குழித்துறை நகராட்சி ஆணையாளர் ராமதிலகம் அறிவுரைபடி நகராட்சி சுகாதார அதிகாரி ஸ்டாலின் குமார், சுகாதார ஆய்வாளர் குருசாமி ஆகியோர் மார்த்தாண்டம் ஆர்.சி.தெரு மற்றும் மார்த்தாண்டம் மார்க்கெட் பகுதிகளில் உள்ள கடைகள், குடோன்களில் அதிரடி சோதனை நடத்தினர். 
அப்போது அந்த பகுதிகளில் உள்ள குடோன்களில் அரசால் தடை செய்யப்பட்ட 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக மொத்தம் ரூ.2,500 அபராதம் விதிக்கப்பட்டது.

Next Story