நாட்டறம்பள்ளி அருகே ஆடு மேய்க்க சென்ற முதியவர் கிணற்றில் தவறிவிழுந்து பலி
நாட்டறம்பள்ளி அருகே ஆடு மேய்க்க சென்ற முதியவர் கிணற்றில் தவறிவிழுந்து பலியானார்.
ஜோலார்பேட்டை
நாட்டறம்பள்ளியை அடுத்த மோட்டூர் பாட்டியாத்தா வட்டம் பகுதியை சேர்ந்தவர் பெரியதம்பி (வயது 70). இவர் தனக்கு சொந்தமான ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது கோவிந்தசாமி என்பவரது 80 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இரவு நேரமாகியும் பெரியதம்பி வீட்டுக்கு வரததாதல், அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. கிணற்றில் தவறி விழந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின்பேரில் நிலைய அலுவலர் கலைமணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சென்று மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றினர். அப்போது பெரியதம்பி கிணற்றில் விழுந்து இறந்திருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரது உடலை மீட்டனர்.
இதுகுறித்து அவரது மகன் கனகராஜ் கொடுத்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story